முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் 400 பிணைக்கைதிகள் கொலை: ஐஎஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்

திங்கட்கிழமை, 25 மே 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 400 பிணைக் கைதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தற்போது ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாமிரா என்ற பழமையான நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றின. இந்நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் நகரம் சென்றதும் ஆயிரக்கணக்கானோர் வீட்டை காலி செய்துவிட்டு உயிர் தப்பினால் போதும் என பக்கத்து நகரங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

தப்பியோட முயற்சிக்கும் யாஸ்டி எனப்படும் பழமை கிறிஸ்தவர்களையும், ஷியா பிரிவு முஸ்லிம்களையும் ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்து வருகின்றனர். இது தவிர அரசு படைகளுக்கு உளவு பார்த்ததாக ஏராளமானோரை கைது செய்து வருகின்றனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் 400 பேரை பொது இடங்களில் வைத்து கொடூரமாக கொலை செய்தும் வருகின்றனர். மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் உயரமான இடங்களில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்வது, உயிருடன் எரித்துக் கொல்வது, கல்லால் அடித்துக் கொல்வது என மிகவும் காட்டுமிராண்டித் தனமான முறையில் கொலை செய்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியா மாநிலம் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவமனை ஒன்றில் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக்காக நர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தீவிரவாதிகள் பொது இடத்தில் சுட்டுக் கொன்றனர். இதே போல் நகருக்கு வெளியே முகாம் அமைத்துள்ள ராணுவ வீரர்களுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்த காரணத்துக்காக 16 வியாபாரிகளையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது தவிர அழகாக இருக்கும் இளம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து