முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்களின் சம்பள உயர்வு ரத்து: இங்கிலாந்து பிரதமர் அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை, 25 மே 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - சிக்கன நடவடிக்கையின் ஒருபகுதியாக இங்கிலாந்து அமைச்சர்களின் சம்பள உயர்வை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்நாட்டு பிரதமர் கேமரூன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கேமரூன் அரசியல் ஆருடங்கலை தவிடுபொடியாக்கி மீண்டும் பிரதமர் ஆகியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் பொருளாதார சீர்திருத்தங்கல் மேலும் தீவிரப்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக தனது அமைச்சரவை சகாக்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.

இங்கிலாந்து பட்ஜெட்டின் பற்றாக்குறையை 5 சதவீதம் அளவுக்கு குறைக்கும் வகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமைச்சர்களின் சம்பள உயர்வு ரத்து செய்யப்படுவதாக கேமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அமைச்சர்கள் தற்போது ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.20 கோடி சம்பளம் வாங்குகிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு 10 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சம்பள உயர்வுக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் எம்பிக்களின் சம்பள உயர்வையும் மறுபரிசீலனை செய்யவும் இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 650 எம்பிக்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 74 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகிறது.இவர்களுக்கான சம்பளத்தை சுதந்திரமான அமைப்பு ஒன்று முடிவு செய்கிறது. இந்த ஆண்டு 10 சதவீத ஊதிய உயர்வுக்கு இந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் கேமரூன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து