முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளின் நலன்களுக்கான பாடுபடும் அரசு பா.ஜ.க : மதுரா பேரணியில் மோடி முழக்கம்

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

மதுரா - மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு மேற்கொண்ட சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க அந்த கட்சி நாடு முழுவதும் 200 இடங்களில் பேரணி நடத்துகிறது. இதன் ஒரு கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுராவில் நேற்று ஆட்சி சாதனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, கடந்த 365நாட்களில் செய்த பணிகளை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 365மணி நேரம் ஆகும் நான் ஒரு போதும் விடுமுறையில் செல்ல மாட்டேன்.ஏழை மக்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.வறுமையை விரட்டுவதற்கு உதவும் எனது வீரர்களாக அவர்கள் இருப்பார்கள்.

கங்கை யமுனை நதிகள் எனது தாயை போன்று உள்ளன.இந்த நதிகளை துாய்மைப்படுத்த நடவடிக் கை எடுக்கப்படும். இந்த நதிகளை சுத்தப்படுத்துவதற்கு மக்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்.கடந்த ஓராண்டில் 6லட்சம் கூடுதல் சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். நமது மக்களின் நலவாழ்விற்காக நியாயமான பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்.இந்தியாவிற்கு ரூ25ஆயிரம் கோடி அன்னிய முதலீடு வந்துள்ளது.

இந்தியாவின் மீது நம்பிக் கை உள்ளதால் இந்த முதலீடு வந்திருக்கிறது.இந்தியாவில் சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டியிருக்கிறது.1300 சட்டங்கள் விரைவில் நீக்கப்படும்.அரசு கருவூலத்தில் ரூ27ஆயிரம் கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது.அந்த பணம் ஏழைகளுக்கு உரிய பணம்.அந்த பணத்தை அவர்கள் பெறுவதற்கு தனித்துவமான அடையாள அட்டையை அளிக்க முடிவு செய்துள்ளோம்.அரசு துறைகளில் உள்ள பிரச்சினைகளை நீக்குவதற்கு நாங்கள் உதவியுள்ளோம். எங்கள் ஆட்சி செயல்பாடுகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.

மிகபெரும் நிர்வாகத்தன்மையை மேற்கொண்டுள்ளோம்.அதிக செலவில்லாத விதைகளை உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளிப்பதற்கு அரசு நடவடிக் கை எடுத்துள்ளது. யூரியா உற்பத்தி செய்யும் ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் தற்கொலைகளை அரசியலாக்கக்கூடாது.இந்தியா சுதந்திரம் 60ஆண்டுகள் ஆகியும் விவசாயிகள் ஏன் துயரம் அடைகிறார்கள் என்பதற்கு தீர்வு காண வேண்டும்.

12கோடி வங்கி கணக்குகளில் எரிவாயு மானியம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. ஏழைகளுக்கு உரிய பணம் கிடைக்க வழி செய்யப்படும் இதில் இடைத்தரகர்களுக்கு இடம் கிடையாது.நான் தலைமை சேவகன். இந்த நாட்டை யாரும் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது .நாங்கள் கடந்த ஓராண்டாக ஆட்சியை திறம் பட நடத்தி வருகிறோம். இதில் ஊழல் என்ற பேச்சுக் கே இடம் இல்லை.ஐக்கிய முற்போக்குகூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்தன் மூலம் அவர்கள் மிக முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

மாற்றத்தை மக்கள்தான் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றத்தை நான் கொண்டு வரவில்லை.மத்தியில் ஆட்சி மாற்றம் வராதிருந்தால் சிறப்பான மாற்றங்கள் வந்திருக்குமா? கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடந்திருக்கா விட்டால் இந்த தேசம்இந்த ஓராண்டில் மேலும் மூழ்கி இருக்கும்.கடந்த 365நாட்களில் நாம் என்ன செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கட்சிக்கு பரிந்துரைத்துள்ளேன். இந்த அரசு ஏழைகளுக்கான அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில் மக்கள் நலவாழ்வு விழாவை பாஜ அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதனை யொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பாஜ அரசின் சாதனைகள் விளக்க கூட்டங்கள் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஜன் கல்யாண் பர்வ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து