முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5.55 கோடி வாக்காளர்களின் விபரம் சேகரிப்பு : தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் தகவல்

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் 5-55 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள், ஈ மெயில் சேகரிக்கப்பட்டு விட்டதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா  கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில்  நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 98.8 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது விவரங்களை கொடுத்துள்ளனர். 70 சதவிகிதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் ஆதார் எண் உள்ளிட்ட வாக்காளர் விவரங்கள் நூறு சதவிகிதம் சேகரிக்கப்பட்டுள்ளன சென்னையில் 83 சதவிகிதமும் காஞ்சிபுரத்தில் 98.8 சதவிகிதமும் வாக்காளர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மே 31-க்குள் அனைவரது விவரங்களும் சேகரிக்கபட்டுவிடும் என்று மாநகராட்சி கமிஷனர் அவகாசம் கோரியுள்ளார். தேவைப்பட்டால் சென்னையில் மேலும் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 5-55 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இன்னும் 7 லட்சம்  வாக்காளர்களின் விவரம் சேகரிக்க வண்டியுள்ளது.

2-3 வாரத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி நிறைவடையும். தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இப்பணி நூறு சதவிகிதம் முடிந்து விட்டது. மற்ற மாவட்டங்களிலும் 99 சதவிகிதம் முடிந்துவிட்டன. வாக்காளர் அட்டையில் ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்ற விவரங்களை அளித்தால் நிறைய வசதிகள், சலுகைகள் மத்திய அரசு ” வழங்க உள்ளது.

ஊட்டியில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஆயிரம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு விடுமுறை தினம் என்று பாராமலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களை பாராட்டி ”, விருதுகள் வழங்க தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க தேர்தல் கமிஷன் ரூ.4 கோடி அனுமதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த தொகை வழங்கப்படும். வாக்காளர் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்படவில்லை என்று புகார்கள் வந்ததையொட்டி தேர்தல் கமிஷன் இதை தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாவிட்டாலும் வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

வாக்காளர்கள் தங்களது விருப்பத்தின் பேரிலேயே  ஆதார் எண் தரலாம். வாக்காளர் அட்டையில் வாக்காளர் தரும் விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்படும். அதை யாருக்கும் வழங்கும் என்ற அச்சம்  தேவையில்லை. வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தப்படும். போலி வாக்காளர் நீக்கப்படும். அரசின் பல்வேறு சலுகைகள் பெற உதவும்.

 சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் குறித்து இன்னும் தேர்தல் கமிஷன் முடிவு செய்யவில்லை. . எனினும் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறும். ஆர்.கே.நகர். மட்டுமின்றி இந்தியாவில் காலியாகும் தொகுதிகளுக்கு சேர்த்து தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து