முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர், கப்பல் மூலம் தேடும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 25 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 5 மீனவர்களை கண்டுபிடிக்கக் ஹெலிகாப்டர், கப்பல் மூலம் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ். இவர்கள் 5 பேரும் கடந்த 22-ம் தேதி மதியம் பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அன்றிரவு 12 மணிக்கு அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால், மறுநாள் மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதுகுறித்து மீன் வளத்துறைக்கும், கடலோரக் காவல் படைக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். துறைமுகம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். மாயமான மீனவர்களைத் தேடும் பணியை உடனே தொடங்காததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் காசிமேடு சிக்னல் அருகே நேற்று முன்தினம் மறியல் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், உடனடியாக மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டர் மற்றும் கடலோரக் காவல் படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், மீனவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த வழியாக வரும் கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கடல் பகுதியில் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். இந்நிலையில், காசிமேடு மீனவர்கள் 2-வது நாளாக நேற்று காலையும் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து