முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கில் இறுதி கட்ட விசாரணை ஜூலை 14ம் தேதி முதல் நடக்கிறது - நீதிபதி ஓ.பி சைனி

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: அரசுக்கு ரூ1.80லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஏல வழக்கில் இறுதி கட்ட விசாரணை ஜூலை 14ம் தேதிமுதல் நடைபெறும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பிசைனி நேற்று அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுகவைச்சேர்ந்த ஆ.ராசா தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் உரிய தகுதி இல்லாத நிறுவனங்களுக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூ1.80லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த மிகப்பெரும் ஊழல்குறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் திமுகவின் ஆ.ராசா கனிமொழி உள்ளிட்ட 17பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றத்தில் ஆராசாவும் கனிமொழியும் நேற்று ஆஜரானார்கள். இந்த வழக்கில் 154சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்கள்.

2ஜி ஊழல் தொடர்பாக ஆ.ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி 7மாதத்திற்கு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆ.ராசா ஓராண்டிற்கு பின்னர் ஜாமீனில் வந்தார்.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை ஜூலை 14ம் தேதி முதல் நடைபெறும் என்று சிபிஐயின் சிறப்பு நீதிபதி ஓ.பி சைனி நேற்று அறிவித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ214கோடி கைமாறியிருந்தது. ,இந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து