முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 9 அதிகாரிகளை இடம் மாற்றி கெஜ்ரிவால் மீண்டும் அதிரடி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில், அதிகாரிகள், போலீசாரை நிர்வகிக்கும் உரிமை யாருக்கு உள்ளது என்பதில் கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கவர்னருக்கே அதிகாரிகளை நிர்வகிக்கும் உரிமை இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையின் அவசர கூட்டம் நேற்றும், இன்றும் நடக்கிறது. இந்த நிலையில் டெல்லி அரசின் ஊழல் தடுப்புத் துறைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, டெல்லியில் கவர்னருக்கு அதிகாரிகளை மாற்ற அதிகாரம் கொடுத்திருப்பது சந்தேகத்தை தருகிறது. ஆனால் டெல்லி மாநில ஊழல் தடுப்புத் துறைக்கு லஞ்சம் வாங்கும் போலீசாரை கைது செய்யும் அதிகாரம் உள்ளது, என்று கூறினார்.
இது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆனால் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவால் கெஜ்ரிவால் உற்சாகம் அடைந்துள்ளார். நேற்று அவர் 9 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், மீண்டும் பொறுப்புகள் வழங்கியும் உத்தரவிட்டார். இதற்கு கவர்னர் நஜீப் ஜங் ஒப்புதல் வழங்குவாரா என்று தெரியவில்லை. இதனால் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கெஜ்ரிவால் நேற்று முன் தினம் தனது அரசின் 100-வது நாளை மக்கள் முன்னிலையில் கொண்டாடினார். அப்போது அவர், மத்திய அரசு தன்னிடம் இருந்து பறித்த அதிகாரங்களை மீண்டும் பெற்றே தீருவேன், என்றார். மேலும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு பொது மக்கள் தன்னை வந்து சந்திக்கலாம் என்று கெஜ்ரிவால் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து