முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய 2 இந்தியப் பெண்களின் பெயர் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      உலகம்
Image Unavailable

பெர்னே: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இரு இந்தியப் பெண்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை அந்நாடு தனது அரசிதழிலில் வெளியிட்டுள்ளது.  பட்டியலில் இடம்பெற்ற நபர்கள் தங்களது கூடுதல் விவரத்தை வெளியிடுவதை விரும்பாவிட்டால், இது தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று சுவிஸ் ஃபெடரல் வரி நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதாகவும் இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சங்கீதா சாவ்னே மற்றும் ஸ்னே லதா சாவ்னே என்ற 2 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சுவிஸ் வங்கி அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இருவரது பிறந்த தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாது சுவிஸ் அரசிதழலில், பிரிட்டன், ஸ்பெயின், ரஷ்ய போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இந்த மாதத்தில் மட்டும் சுவிட்சர்லாந்து அரசிதழில் 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் மேலும் சில வெளியிடப்படலாம் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து