முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா: 2ம் தேதி தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை: கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பெருந்திருவிழாவில், 2-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பல்லக்கு, சிம்ம, அனுமான், கருட, சேஷ, யானை, தங்கச்சிவிகை, பூச்சப்பரம், குதிரை, சப்தாவரணம் போன்ற பல்வேறு வாகனங்களிலும், சப்பரங்களிலும் கூடலழகர் பெருமாள், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்படி நேற்று முன் தினம் மாலை பெருமாள் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று காலை திருப்பல்லக்கில் எழுந்தருளிய பெருமாள், மாலையில் சிம்ம வாகனத்தில் உலா வருகிறார்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. 11ம் நாளன்று இரவு 9 மணிக்கு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார வர்தராஜன், உதவி ஆணையர் அனிதா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து