முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செரீனா, சிலிச் 2-வது சுற்றுக்கு தகுதி

புதன்கிழமை, 27 மே 2015      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் - கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தொடக்க சுற்றில் செக்குடியரசுவை சேர்ந்த ஆந்திரியாவை எதிர்கொண்டார். இதில்  6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கி தகுதி பெற்றார். இந்த சுற்றில் அவர் ஜெர்மனியை சேர்ந்த அன்னா லெனாவை சந்திக்கிறார்.

மற்ற ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனையான குவிட்டோவா செக்குடியரசை சேர்ந்தவர், 4 நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கி டென்மார்கை சேர்ந்தவரும், குஷ்னெட் சோவா ரஷ்யாவை சேர்ந்தவர் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். உலகின் 25ம் நிலை வீராங்கனையான ஜெலீனா ஜான்கோவிக் (செர்பியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். பல்கேரியாவை சேர்ந்த செசில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார். இதே போல் சுலோவாக்கி யாவை சேர்ந்த டேனிலா ஹனுசோவாவும் தோற்றார். 9-ம் நிலை வீரரான மரின்சிலிச்  தொடக்க சுற்றில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாசைசந்தித்தார். இதில் சிலிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியனும், 6-ம் நிலை வீரருமான ரபேல் நடால், நம்பர் வீரரான ஜோகோவிஜ், டேவிட் பெடரர், இஸ்னெர் ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து