முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் விமானத்தின் என்ஜின்கள் செயலிழப்பு

புதன்கிழமை, 27 மே 2015      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் இருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின்கள் திடீரென நடுவானில் செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 194 பயணிகள் உயிர் தப்பினர். சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து ஏர் பஸ் ஏ. 330-300 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 182 பயணிகளுடன் புறப்பட்டது.

ஷாங்காய் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக என்ஜின்களில் மின்சக்தியை இழந்தது. இதனால், விமானத்தின் என்ஜின்கள் தற்காலிகமாக செயலிழந்தது. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

இதனால் 182 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இரவு 10.56 மணியளவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஷாங்காய் நகரில் தரையிறங்கினர். அதனைத் தொடர்ந்து விமானத்தில் என்ஜின்கள் சோதனையிடப்பட்டன. அப்போது அவை எவ்வித குறைபாடும் இல்லாமல் நல்ல முறையில் இயங்குவது உறுதி செய்யப்பட்டது. சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்றி, 182 பயணிகளின் உயிரைக் காத்த விமானியின் செயலை பயணிகள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து