முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் விஐபி தரிசன நேரம் குறைப்பு

புதன்கிழமை, 27 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையா் கோயிலில் விஐபி தரிசன நேரம் குறைக்கப்பட்டு சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அதிகாரிகளுடன் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ ஆலோசனை நடத்தினார். இதில் உதவி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார் ரெட்டி, கண்காணிப்பு பொறியாளர் வெங்கடேஸ்வரலு, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் சேஷாரெட்டி, துணை செயல் அலுவலர் வேணுகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இணை செயல் அலுவலர் அளித்த பேட்டி:- திருப்பதி கோயிலில் தரிசனத்து செல்லும் வரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதனால் நாள்தோறும் சுவாமியை அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது ஒரே நாளில் அதிகபட்சமாக 82 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தற்போது வரிசைகளில் மாற்றம் கொண்டு வந்ததால் 3 வரிசைகளில் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விஐபி பிரேக் தரிசன நேரமும் குறைக்கப்பட்டு சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருநாளைக்கு 95 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை இதுவரை எப்போதும் இல்லாதது ஆகும்.

வைகுண்டம் மையத்தில் உள்ள 31 அறைகளிலும் காத்திருக்கும் பக்தர்களுக்கு லட்டு டோக்கன்கள் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு தெரியும் விதமாக தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள் இருந்து காணிக்கைகள் எண்ண்பட்டவுடன் பரக்காமணியில் இருந்து நாணயங்களை வெளிகொண்டு செல்ல ஐஐடி நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து