முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி: அமெரிக்கா

புதன்கிழமை, 27 மே 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - காஷ்மீர் பிரச்னையை முன்வைத்து இந்தியாவுக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா உள்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல தீவிரவாத முகாம்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசியுடன் இயங்கி வருகின்றன. மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இது தவிர மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லாக்வியை ஆதாரம் இல்லை எனக்கூறி அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது.

பாகிஸ்தான் அரசு தரப்பு வக்கீலின் மோசமான வாதமே தீவிரவாதி விடுதலையாக முக்கிய காரணம். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்து வருகிறது.  ஆனால் இவற்றை பாகிஸ்தான் அரசு எப்போதும் ஒப்புக் கொண்டதில்லை. இந்தியாவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அறிக்கையில், பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமியாக உள்ளது.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் பாகிஸ்தான் அரசுகள் இதனை கண்டு கொள்ளாமல் சகித்துக் கொண்டு இருக்கின்றன. அண்டை நாடுகளுடனான பிரச்னையில் மறைமுக ஆயுதமாக பாகிஸ்தான் இவர்களை பயன்படுத்தி வருகிறது.  ஆப்கனில் அரசுக்கு எதிராக போராடுபவர்களையும், இந்தியாவுக்கு எதிரான ஆயுத குழுக்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு நிதிஉதவி அளிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 12ஆண்டுகளில் 1800 கோடி டாலர்கள் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து