முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 27 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ளன. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, திருத்தணி, வேலூர், கடலூர், கரூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரியில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. திருத்தணியில் நேற்று முன்தினம் 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் அதற்கு மறுநாள் வெயிலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்து விடுகிறது. நேற்று வேலூரில் 2 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் கடல் காற்று தாமதமாக வருவதுதான். இதனால் வெப்பம் அதிகம் உணரப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இன்னும் அதிகமாக வெப்பம் நிலவுகிறது. வெப்ப சலம் காரணமாக மழை பெய்தாலும் அதற்கு மறுநாள் மீண்டும் வெயில் உச்சத்துக்கு சென்று விடுகிறது. தென் மேற்கு பருவக்காற்று வீச தொடங்கினால்தான் இனி வெப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து