முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு

புதன்கிழமை, 27 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - தொலை தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தலைவர் பிரதீப் பெய்ஜால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்மீது  குற்றச்சாட்டு கூறிய நிலையில் மன்மோகன் சிங் நேற்று திடீரென பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்)தலைவர் பிரதீப் பெய்ஜால் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் 2ஜி விவகாரம் தொடர்பாக ஒத்துழைக்க வேண்டும் அப்படி செய்ய தவறினால் நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என மன்மோகன் சிங் எச்சரித்தார் என கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல. மன்மோகன் சிங்கையும் காங்கிரசின் புகழையும் கெடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இப்படி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.டிராய் தலைவர் குற்றம் சாட்டிய ஒரு நாளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று நேரடியாக சந்தித்து பேசினார்.

தனது சொந்த லாபத்திற்காக எனது அலுவலகத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியது இல்லை என  அப்போது மன்மோகன் சிங் தெரிவித்தார். மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது நடந்த ஊழல் விவகாரங்களை தற்போதைய அரசு  கூறி வருகிறது என மன்மோகன் சிங் கூறியிருந்தார்.இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொம்மை போல இருந்தார் என பாஜக விமர்சித்து இருந்தது.

முந்தைய அரசில் நடந்த ஊழல்கள் குறித்து புத்தகங்கள் வர துவங்கிய நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது வாயை திறந்துள்ளார் என பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பீத் பத்ரா கூறினார். புதன் கிழமையன்று டெல்லியில் தேசிய  மாணவர்கள் மாநாட்டில்கலந்து கொண்ட மன்மோகன் சிங் நானோ அல்லது எனது குடும்பத்தினரோ எனது நண்பர்களோ செழிப்படைவதற்காக நான் பதவி வகித்த அலுவலகத்தை பயன்படுத்தியது இல்லை என மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பொருளாதார வளர்ச்சி நொறுங்கும் வகையில் இருந்தது.எங்களது ஆட்சியின் போது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். புதிய திட்டங்களையும் அறிவித்தோம்.என மன்மோகன் சிங் தெரிவித்து இருந்தார். ஒவ்வொரு வழக்கிலும் நான் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நான் துயரப்படுவேன் என்று சிபிஐ என்னை எச்சரித்தது என்று டிராய் தலைவர் பெய்ஜால்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஒரு ஆண்டில் மன்மோகன் சிங்கிற்கு எதிராகவும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் வந்த 3வது புத்தகமாக பெய்ஜால் எழுதிய புத்தகம் உள்ளது. தன் மீது டிராய் தலைவர் குற்றம் சாட்டி புத்தகம் எழுதியுள்ள நிலையில் மன்மோகன் சிங் நேற்று பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்து பேசினார். அப்போது தான் நிரபராதி என்றும் தனது அலுவலகத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்தியது இல்லை என்று மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து