முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் மாநில மூஸ்லீம் லீ்க் தலைவர் ஷேக்தாவூதின் தாயார் பாத்திமா உடலுக்கு அமைச்சர்கள், அதிமுகவினர் அஞ்சலி

புதன்கிழமை, 27 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழ்மாநில மூஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூதின் தாயார் பாத்திமா உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்ரும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ் மாநிலமுஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ். ஷேக் தாவூதின் தாயார் பாத்திமா மரணமடைந்த செய்தியைக் கேட்டு இரங்கல் செய்தி வெளியிட்டதோடு, அவருக்குஅனுப்பி உள்ள கடிதத்தில்,`அன்புச் சகோதரர் ஷேக் தாவூத்துக்கு தங்களின் அன்புத் தாயார் திருமதி பாத்திமா தனது 96-ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம்அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளபோதிலும், அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறேன். பாத்திமாவை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக, நேற்று பிற்பகல், அதிமுக அவைத் தலைவர். இ. மதுசூதனன், அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும்,திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளரும், தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான அ. தமிழ்மகன் உசேன், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்றஉறுப்பினருமான . அ. அன்வர்ராஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர், சென்னை, அயனாவரத்தில்வைக்கப்பட்டிருந்த, . ஷேக் தாவூத் தாயார் பாத்திமாவின்பூத உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, வட சென்னைவடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,வடசென்னை எம்.பி டி.ஜி.. வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த கழகநிர்வாகிகள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து