முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சர்வான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: சோனியா காந்தி உறுதி

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம், பச்சர்வான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். டேராடூன் - வாரணாசி செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 20ம் தேதி பச்சர்வான் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 30 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இது சோனியாவின் ரேபரேலி தொகுதிக்குட்பட்ட பகுதி என்றபோதிலும், சோனியா அங்கு செல்லவில்லை. இதுகுறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்ததை தொடர்ந்து, ஒருநாள் பயணமாக நேற்று ரேபரேலி சென்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பச்சர்வான் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

அப்போது பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கிய சோனியா காந்தி, தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ரயில் விபத்தில் பலியான ஷிவேந்திர சிங் என்பவரின் மனைவி சுஷ்மாவுக்கு பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையும் சோனியா காந்தி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து