முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாக நான் குரல் கொடுக்கவில்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மாட்டிறைச்சி உண்பது என்பது இந்துக்களின் உணர்வு சார்ந்த விஷயம். மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கோ, அரபு நாடுகளக்கோ செல்லலாம் என்று நக்வி கூறினார்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜுவிடம் இதுகுறித்து பத்திரிகையொன்று கருத்து கேட்டபோது, "நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். நான் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவன். என்னை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? மற்றொருவர் பழக்க வழக்கத்துடன் யாரும் விளையாட கூடாது, என்று கூறியுள்ளார். இதுகுறித்த செய்தி பிற ஊடகங்களிலும் வெளியானது. மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து மோதல் என்று ஊடகங்கள் சித்தரித்தன.

இதையடுத்து அவசரமாக தனது கருத்தை ரிஜிஜு மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:   நான் தவறுதலாக சித்தரிக்கப்பட்டுவிட்டேன். நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிட பாகிஸ்தான் செல்வீர்களா என்று என்னிடம் மீடியா கேட்டபோது, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, உணவு வழக்க வழக்கத்தை தடுக்க கூடாது. அதேநேரம், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில், மாட்டிறைச்சியை தவிர்க்கலாம். அதேபோல, சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாநிலங்களில் அவர்கள் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இவ்வாறு ரிஜிஜு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து