முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது காங்கிரஸ்- சோனியா மீது மோடி கடும் தாக்கு

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சோனியா காந்தி அரசியல்சாசன சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மைய மாக இருந்தார் என்று பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மூர்க்கமாகவும், ஆணவத் துடனும் நடந்து கொள்கிறது. அங்கு தனிமனிதரின் ஆட்சி நடை பெறுகிறது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி ஒர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:  காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில்தான் அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தலைமை ஆட்சியை நடத்தியது. மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்து ஓராண்டு முடிந்த பிறகும் காங்கிரஸ் கட்சியால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் எங்கள் அரசு மீது வெறுப்புடன், தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மக்களை புறக்கணித்தது, எங்கும், எதிலும் ஊழலில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணத் தினால்தான் அவர்களை ஆட்சியில் இருந்து மக்கள் விரட்டினர். அதிலிருந்து காங்கிரஸ் தலைமை பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

ஆனால் இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் தலைமை தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. விவசாயிகள், ஏழைகள், கிராமம், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நில கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்களைத் தெரிவித்தால் அதை ஏற்க அரசு தயார். இந்த யோசனைகள் கிராமம், ஏழைகள், விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தால் நாட்டுக்கு சாதகமாக இருந்தால் ஏற்போம்.  இவ்வாறு மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து