முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, விமானங்கலை தாமதமின்றி இயக்குவது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடை பிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர்பட்டுள்ள வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஏர் இந்தியா நிறுவன வளர்ச்சிக்கு தடையாக இருக்கு் பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், விமான பணிப்பெண்கள் சிலர் தாமதமாக பணிக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கிடையே, பல விமானங்கள் தாமதமாக புறப்படுவதற்கு விமான பணிப் பெண்கள் தாமதமாக வருவது தான் காரணம் என்று பயணிகள் புகார் செய்து இருந்தனர். இதையடுத்து தாமதமாக பணிக்கு வருதல் மற்றும் விமான நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை கடை பிடிக்காதவர்கள் குறித்து அறிக்கை பெறப்பட்டது. இதில் 272 விமான பணிப் பெண்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வில்லை என்பது தெரியவந்ததது.

இவர்களில் 17 விமான பணிப்பெண்கள் 3 முறைக்கு மேல் வேலைக்கு தாமதமாக வந்தது தெரிய வந்தது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வேலைக்கு தாமதமாக வந்த 17 விமானப் பணி பெண்களும் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில், நீண்ட தூரம் செல்லும் விமானங்களில் பணிபுரியும் விமான பணிப்பெண்கள் தங்களுக்கு ஓய்வு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து