முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்காக ஜெர்மனியில் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 28 மே 2015      உலகம்
Image Unavailable

பெர்லின் - இரண்டாம் உலகப்போரின்போது புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்காக, ஜெர்மனியில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப்போரை ஜெர்மனி முன்னின்று நடத்தியது. அப்போது, ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வெடி பொருட்கள் பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 2ம் உலகப்போரி முடிந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், கட்டுமான பணிகள் நடக்கும்போது அவ்வப்பொழுது வெடிபொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜெர்மனியின் கலாங் நகரில் முல்கெயிம் அருகே நடந்த கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, 16 அடி ஆழத்தில் ஒருடன் எடையுள்ள வெடி குண்டு இருந்தது.  வெடி குண்டை சோதனை செய்து பார்த்தபோது, அது இரண்டாம் உலகப் போரின்போது புதைக்கப்பட்ட வெடிகுண்டு என தெரியவந்தது. இந்நிலையில், ஆற்று பகுதிக்கு அந்த வெடிகுண்டு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

எனவே, வெடி குண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். காப்பகத்தில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட முதியோர் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அங்குள்ள புகழ் பெற்றவன உயிரியல் பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். இது வெற்றிகரமாக முடிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதை அடுத்து மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து