முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் 6 முறை நிலநடுக்கங்கள்

வியாழக்கிழமை, 28 மே 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு: கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துக்குப் பிறகு இதுவரை 280 முறை பின் அதிர்வுகள் நேபாளத்தில் ஏற்பட்டுள்ளன. நேற்று நேபாளத்தில் 6 முறை மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலை 5.29 மணிக்கு ஏற்பட்ட மித நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக இருந்தது.  அதன் பிறகு தொலாகா மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 4.2 என்று பதிவான மித நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அதிகாலை 3.07 மற்றும் 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 4.0 என்று பதிவான 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

மீண்டும் நண்பகல் 12.14 மணியளவில் தோல்கா பகுதியை மையமாகக் கொண்ட, 4.1 ரிக்டர் அளவு மித நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த  ஏப்ரல் 25-ம் தேதியன்று ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்துக்கு பிறகு நேபாளம் 280 முறை குலுங்கியுள்ளது.  ஏப்ரல் 25-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் மே 12-ம் தேதி ஏற்பட்ட 7.3 அளவு நிலநடுக்கத்திலும்  சுமார் 9,000 பேர் பலியானார்கள். 21,000 பேர் படுகாயமடைந்தனர்.  நிலநடுக்க பாதிப்புகளால்  நேபாளம் போராடிக் கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து