முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்து விலையை குறைத்து மாஃபியாக்களை ஒழிப்போம்: மத்திய அமைச்சர் ஆனந்த குமார்

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா
Image Unavailable

கொச்சி, பேஸ்மேக்கர், மூட்டு சிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

கொச்சியில் நடந்த மோடி அரசின் முதலாமாண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த்குமார் மேலும் கூறியதாவது:

மருந்து மாஃபியாக்கள், அத்தியாவசிய மருந்து பொருட்கள், உபகரணங்களின் விலையை இஷ்டத்துக்கு ஏற்றி செய்துவரும் பாஃபியாக்களின் அட்டூழியங்களை அடக்க நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளது. அரசு தனது நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இதய நோயாளிகள் பயன்படுத்தும் பேஸ்மேக்கர்கள், செயற்கை வால்வு மற்றும் மூட்டு அறுவையின்போது உள்ளே வைக்கப்படும் உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவற்றை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் திட்டத்தின்கீழ் கொண்டுவர உள்ளோம்.

ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கூட, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்ய இந்த மாஃபியாக்களால் முடிகிறது. இதற்கு அரசு முடிவு கட்டும். நாடு முழுவதும் மலிவுவிலை மருந்தகங்கள் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அனந்த்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து