முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கேபினட் செயலாளராக பி.கே. சின்ஹா நியமனம்!

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா

புது டெல்லி, மத்திய அமைச்சரவையின் கேபினட் செயலாளராக பிரதீப் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய கேபினட் செயலாளராக அஜித் சேத் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவி காலம் வருகிற 12-ந்தேதி நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து வரும் 13-ந்தேதி முதல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீப் குமார் சின்ஹா அடுத்த கேபினட் செயலாளாராக பதவி வகிக்க உள்ளார்.

இவரது பதவி நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்து உள்ளார். பிரதீப் குமார் சின்ஹா, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜுலை முதல் மின் துறை அமைச்சகத்தில் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் மத்திய அரசிலும் உத்தர பிரதேச மாநில அரசிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து