முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டு இறைச்சிக்கு தடையில்லை: பாஜ தலைவர் அமித் ஷா பேட்டி

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா
Image Unavailable

பனாஜி, நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட வில்லை என்று பாஜ தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கோவா மாநிலம் பனாஜியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கோவா மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கு ஏற்கெனவே தடை இருந்தது. அந்த தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். அது போல மக்களின் மன உணர்வை புரிந்து கொண்டு ஒவ்வொரு மாநிலமும் உரிய முடிவு எடுக்க வேண்டும். பாரஜீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் மக்களின் மன உணர்வை பரிசிலித்த பிறகே முடிவு செய்யலாம். மாட்டிறைச்சி சாப்பிட விரும்புபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என்று மத்திய அமைச்சர் முத்தூர் அப்பாஸ் நக்வி பேசி இருப்பது அவரது சொந்த கருத்தாகும். அது பாரதீய ஜனதாவின் கருத்து அல்ல.

பாஜகவை பொருத்த வரை நாடு முழுவதும் மாட்டிறைச்சி தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டே நாங்கள் செய்ல் படுவோம். காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமர் மீது அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. ஏனெனில் அதிகார மையம் வேறு இடத்தில் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. பிரதமர் மீதான நம்பிக்கை அதிகாரிகளிடமும், மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து