முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் யோகா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்:மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      இந்தியா
Image Unavailable

 புது டெல்லி, ஜூன் மாதம் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான யோகா கலையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியர்கள் அனைவரிடமும் யோகா கலையை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் 21ம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சிக்கு இந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. யோகாவை பிரபலப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். டெல்லி ராஜபாதையில் ஜூன் 21ம் தேதி காலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

35 நிமிடங்கல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது சூரிய நமஸ்காரம், சக்கராசனம், நடராஜசனம், வத்யாசனம், பத்மாசனம், சித்தாசனம், வஜ்ராசனம், ஹலாசனம், சர்வங்காசனம், புஜங்காசனம், சலபாசனம் ஆகியவை செய்யப்படும் என்று அரசு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த யோகாசனங்களில் பிரதமர் மோடி எந்தெந்த ஆசனங்களை செய்வார் என்று தெரியவில்லை. இந்த ஆசனங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி தினமும் அதிகாலை செய்து வருவதால், அனைத்தையும் அவர் செய்யக் கூடும் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி யோகா செய்யும் போது அவருடன் யோகா செய்ய சுமார் 45 ஆயிரம் பேரை திரட்டதிட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக யோகா தொடர்புடைய அமைச்சரும் தனது ஊழியர்கள் அனைவரும் யோகா நிகழ்ச்சிக்கு தவறாமல் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மற்ற அமைச்சக ஊழியர்களுக்கும் இது போன்ற அறிவுறுத்தலை வழங்குமாறு அந்த அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. எனவே மத்திய அரசு ஊழியர்கள் மோடியின் யோகா நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி டெல்லி போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து