முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு தீவிரவாதிகள் அனுப்பிய உளவு புறா சிக்கியது

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      உலகம்
Image Unavailable

சண்டிகர், பஞ்சாப் மாநில பதன்கோட் பகுதியில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக மத்திய உளவுத்துறை இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து பஞ்சாப் மாநில போலீசார் பதன் கோட் பகுதியில் கன் காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் பதன் கோட் அருகில் உள்ள மன்வால் என்ற கிராமத்தில்  ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புறா வந்து இறங்கியது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்தார். இதுபற்றிய தகவல் பரவியதும் அந்த கிராமத்தில் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே பதன் கோட் போலீசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்கு சென்று அந்த பறவையை பிடித்தனர்.

வெள்ள நிறம் கொண்ட அந்த புறா இறகுகளில் உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. புறாவின் ஒரு இறக்குக்குள் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டு இருந்தது. அந்த நம்பர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண்தில் உள்ள நரோவல் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த புறாவை போலீசார் ஸ்கேன் செய்து பார்த்தனர். அதன் முடிவு செளியிடப்படவில்லை.

புறா உடலுக்குள் ரகசிய கருவிகள் வைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த புறாவை காஷ்மீரில் உள்ள தங்கள் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஷ்மீருக்கு பதில் அந்த புறா வழி தவறி வந்து விட்டதாக தெரிகிறது. பதன்கோட் போலீசார் அந்த புறாவை தாங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து