முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2154 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 63 துணை மின் நிலையங்கள் : ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -   முதல்வர்ஜெயலலிதா நேற்று  தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் 57 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் - அந்தியூரில் 230/110 கி.வோ. துணை மின் நிலையம்,  அளுக்குளியில்  110/11  கி.வோ. துணை மின் நிலையம்,  நம்பியூரில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், புதுசூரிபாளையத்தில் 33/11  கி.வோ. துணை மின் நிலையம்,  மலையப்பாளையத்தில் 33/11  கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் 2097 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 58 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். முதல்வர்ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்த முனைப்பான நடவடிக்கையின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 4991.5 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோடை காலத்தில் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 

மின்பாதையில் ஏற்படுகின்ற மின்இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான  மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா    தலைமையிலான அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், 57 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு
மாவட்டம் - அந்தியூரில் 230/110 கி.வோ. துணை மின் நிலையம்,  அளுக்குளியில்  110/11  கி.வோ. துணை மின் நிலையம்,  நம்பியூரில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், புதுசூரிபாளையத்தில் 33/11  கி.வோ. துணை மின் நிலையம்,  மலையப்பாளையத்தில் 33/11  கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களை  காணொலிக் காட்சி மூலமாகமுதல்வர் ஜெயலலிதா நேற்று  திறந்து வைத்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூரில் 230/110 கி.வோ. துணை மின் நிலையம், சாலைப்புதூரில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம், செல்லப்பம்பாளையத்தில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; காஞ¦சிபுரம் மாவட்டம் - பெரும்பாக்கத்தில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் வடக்குப்பட்டில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; திருவள்ளூர் மாவட்டம்  - திருத்தணியில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் மாத்தூரில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;   விழுப்புரம் மாவட்டம் - அழகாபுரத்தில்  110/22 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் மணலூர்பேட்டையில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம்; 

மதுரை மாவட்டம் - இலந்தைக்குளம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும்  சின்னக்கட்டளையில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;  திருநெல்வேலி மாவட்டம் - மூலக்கரைபட்டியில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் சங்கனான்குளத்தில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; திண்டுக்கல் மாவட்டம் - மினுக்கம்பட்டியில்  110/22 கி.வோ. துணை மின் நிலையம்; திருவண்ணாமலை    மாவட்டம் -   மண்டகொளத்தூரில்  33/11 கி.வோ. துணை மின் நிலையம்;  கன்னியாகுமரி மாவட்டம் - ஆசாரிபள்ளத்தில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டையில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம்; 

கடலூர் மாவட்டம் - செம்மண்டலத்தில்  110/22 கி.வோ. துணை மின் நிலையம்; நாமக்கல் மாவட்டம் - பல்லக்காபாளையத்தில் 230/110  கி.வோ. துணை மின் நிலையம்;  தருமபுரி மாவட்டம் - வேப்பிலைப்பட்டி முத்தாம்பட்டியில் 33/11  கி.வோ. துணை மின் நிலையம்;கிருஷ்ணகிரி மாவட்டம் - ஆலப்பட்டியில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், ஜெகதேவியில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், டைடனில்  33/11 கி.வோ.   துணை   மின்    நிலையம்,  கெலமங்கலத்தில் 33/11 கி.வோ. துணை   மின்  நிலையம், ஓரப்பத்தில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; சேலம்  மாவட்டம் - மல்லியக்கரையில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம்,  கூடமலையில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம், நங்கவள்ளியில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், தேவூரில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம்; தூத்துக்குடி மாவட்டம் - கயத்தாரில் 400/230-110 கி.வோ. துணை மின் நிலையம், துரைச்சாமிபுரத்தில் 110/33/11 கி.வோ. துணை  மின்  நிலையம்,  கொம்புக்காரநத்தத்தில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், பசுவந்தணையில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; திருப்பூர்  மாவட்டம் - ஓலப்பாளையத்தில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம், கோட்டமங்கலத்தில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம்,  பல்லகவுண்டன்பாளையத்தில்  110/11 கி.வோ. துணை மின் நிலையம், வஞ்சிபாளையத்தில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம்; நாகப்பட்டினம்   மாவட்டம் - பொறையாரில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், பெரம்பூரில் 110/33 கி.வோ துணை மின் நிலையம், மணக்குடியில் 33/11 கி.வோ துணை மின் நிலையம்; பெரம்பலூர் மாவட்டம் - பேரளியில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம், ஆலம்பாடியில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம், கழனிவாசலில் 33/11 கி.வோ.  துணை மின் நிலையம்;   புதுக்கோட்டை மாவட்டம் - தொண்டைமான்நல்லூரில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் புதுக்கோட்டை நகரப்பகுதியில்  110/22 கி.வோ. துணை மின் நிலையம்;   தஞ்சாவூர் மாவட்டம் - கரம்பயத்தில் 110/33 கி.வோ. துணை மின் நிலையம், வலங்கைமானில் 33/11  கி.வோ. துணை மின¦ நிலையம், பள்ளத்தூரில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூரில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், சித்தேரியில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்;  திருச்சிராப்பள்ளி மாவட்டம் - காட்டுப்புத்தூரில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், எடமலைபட்டிபுதூரில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், மெயின்கார்டு கேட்டில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; வேலூர் மாவட்டம் - திருவலத்தில் 400/230 கி.வோ. துணை மின் நிலையம், வாணியம்பாடியில் 110/33  கி.வோ. துணை மின் நிலையம், சோமலாபுரத்தில்   110/11 கி.வோ.  துணை  மின் நிலையம்,    வாலாஜாவில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், போர்ட்ரவுண்டில் 33/11 கி.வோ. துணை மின் நிலையம்; என மொத்தம் 2154 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 63 துணை மின் நிலையங்களை  தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்,மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர்  கு. ஞானதேசிகன், ., தமிழ்நாடு அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), எரிசக்தித் துறைச் செயலாளர் (பொறுப்பு)  ராஜேஷ் லக்கானி, , தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய் குமார்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து