முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் காலிறுதியில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 29 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலிய சாம்பியன் பாட்மிண்டன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான, இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சுன் யு-வை எதிர்கொண்டார்.21-19, 19-21, 21-14 என்ற செட் கணக்கில், சுன் யு-வை வீழ்த்தி சாய்னா வெற்றியை வசப்படுத்தினார்.

இதில் முதல் செட்டை சாய்னா 21-19 எனக் கைப்பற்றினார். 2வது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய சீன வீராங்கனை சுன் யு 21-19 என அந்த செட்டை கைப்பற்றினார். சாய்னா மூன்றாவது செட்டை 21-14 என எளிதில் வென்று 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சாய்னா நேவால், சீனாவின் ஷிக்சியான் வாங்-கை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வாங்க், 15க்கு 21 மற்றும் 13க்கு 21 என்ற நேர் செட்களில் சாய்னாவை எளிதாக வெற்றி கண்டார். இதனால், நடப்பு சாம்பியன் சாய்னா நேவால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து