முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 1-ந்தேதி முதல் ஏ.சி வகுப்புக்கான ரயில் கட்டணம் உயர்வு

சனிக்கிழமை, 30 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பயணிகள் ரயில் கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே பட்ஜெட்டில் ஏ.சி. வகுப்புகளுக்கான கட்டணத்தில் சேவை வரி உயர்த்தப்பட்டது. தற்போது இருக்கும் சேவை வரி 12.36%-ல் இருந்து 14% உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சேவை வரியை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கை ரயில்வே வாரியத்தில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஏ.சி. சேர்கார், ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 3-ம் வகுப்புகளுக்கு கட்டணம் அதிகரிக்கிறது. 2% க்கும் குறைவாக சேவை வரி அதிகரித்து இருப்பதால் கட்டணமும் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் கூறப்படுகிறது. டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்ப 100-க்கு 1 ரூபாய் என்ற அளவில் மட்டுமே கட்டண உயர்வு இருக்கும்.

சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு சேவை வரி உயர்வு இல்லை என்பதால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் புதிய கட்டணத்திற்கான மாற்றம் செய்யப்படும் வரை பயணிகளிடம் இருந்து பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஜூன் 1- ந் தேதி அல்லது அதற்கு பின் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து