முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பஸ் பயணிகள் 19 பேர் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 30 மே 2015      உலகம்
Image Unavailable

குவேட்டா - பாகிஸ்தானில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து கராச்சிக்கு நள்ளிரவு சென்ற 2 பஸ்களை மஸ்தாங் என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் மடக்கினர். பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த அவர்கள், திடசீரென பஸ்சில் புகுந்து பயணிகளை சரமாரியாக சுட்டனர்.

இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயணிகளின் உடல்களை அங்குள்ள மலைப்பகுதியில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பினர். தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மகாணத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தனிநாடு கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கராச்சி நகரில் சென்று கொண்டிருந்த பஸ்சை மடக்கி, அதில் பயணம் செய்த 43 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதேபோல் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து