முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவை வரி அதிகரிப்பு எதிரொலி: ரெயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது

சனிக்கிழமை, 30 மே 2015      தமிழகம்
Image Unavailable

 சென்னை - மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒரு வருடத்திற்குள் 2 முறை ரெயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் சரக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் பிளாட்பாரம் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக கூடுதலாக்கப்பட்டது. முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரெயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது. சீசன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ரெயில் வகுப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.

முன் பதிவு செய்யப்படாத டிக்கெட் கட்டணமும் அதிகரித்தது. இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதித்தனர். நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பயணிகளுக்கு தரமான உணவு மற்றும் வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ரெயில்வே துறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டது. 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து ஜூன் 1–ந்தேதி முதல் சேவை வரியை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை ரெயில்வே வாரியத்தில் இருந்து அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் நேற்று முன்தினம் இரவு        அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண பெட்டிகள் முதல் ஏ.சி. பெட்டிகள் வரை சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பெட்டிகளுக்கு ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி பெட்டிகளுக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை உயருகிறது.

சேவை வரி உயர்வால் அனைத்து வகுப்பு ரெயில் கட்டணமும் அதிகரிக்கிறது.இதனால் ஏ.சி. சேர்கார், ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 3–ம் வகுப்புகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய கட்டண உயர்வு குறித்த விவரங்கள் இதுவரை ரெயில்வே சர்வரில் மாற்றம் செய்யப்படவில்லை. சேவை வரி உயர்வால் அதிகரிக்கும் ரெயில் கட்டணம் குறித்த மாற்றங்கள் நாளைக்குள் சர்வரில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– சேவை வரி உயர்வு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவித்ததை தொடர்ந்து ஜூன் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான கடிதம் நேற்றிரவு தெற்கு ரெயில்வேக்கு வந்துள்ளது.

அதன் முழு விவரங்கள் குறித்த தகவல் இன்று தான் தெரியும். எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு கட்டணம் உயருகிறது என்ற விவரங்கள் இனி தான் தெரிய வரும். புதிய கட்டணத்திற்கான மாற்றம் செய்யப்படும் வரை பயணிகளிடம் இருந்து பழைய கட்டணமே வசூலிக்கப்படும். ஜூன் 1–ந்தேதி அல்லது அதற்கு பின் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து