முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் : இன்னும் 4 நாள் அதிக வெப்பம் நீடிக்கும்

சனிக்கிழமை, 30 மே 2015      தமிழகம்
Image Unavailable

 சென்னை - கோடைகாலத்தில் வாட்டிவதைக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கி 29–ந்தேதி வரை நீடித்தது. தமிழகத்தின் கோடை காலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. காற்றழுத்த தாழ்வுநிலை, மேல்அடுக்கு சுழற்சி ஆகிவற்றின் காரணமாக அவ்வப்போது மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக வெப்பம் குறைந்தது. ஆனால் சென்னையில் சில தினங்கள் மிதமான வெப்பநிலை நீடித்தது. பெரும்பாலான நாட்களில் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் 4–ந்தேதி தொடங்கியது. ஆனால் 2–ந்தேதியே சென்னையில் வெயில் 100 டிகிரி கொளுத்த தொடங்கி விட்டது. 3–ந்தேதி 97 டிகிரி ஆனது.

4–ந்தேதி முதல் 7–ந்தேதி வரை வெயில் அளவு 95 டிகிரியாக இருந்தது. 9–ந்தேதி மீண்டும் வெப்பம் 98 டிகிரி ஆனது. 10–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை 90 டிகிரியையொட்டியே வெப்பம் காணப்பட்டது. 17–ந்தேதிக்கும் பிறகு மீண்டும் சூடு பறக்க தொடங்கியது. 18–ந்தேதி 98 டிகிரியாக இருந்த வெயில் 19–ந்தேதி 100 டிகிரியை தாண்டியது. 20–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை 104 டிகிரி வெப்பம் தாக்கியது. 24–ந்தேதி உச்சகட்டமாக 108 டிகிரி வெயில் வறுத்து எடுத்தது. 25–ந்தேதியும் அதே வெப்பம் நீடித்தது.

26–ந்தேதி வெப்பம் 104 டிகிரி ஆனது. 27–ந்தேதி 100 டிகிரியான வெயில் 28–ல் 104 டிகிரியாக அதிகரித்தது. நேற்று 105 டிகிரி வெயில் தகித்தது. அடுத்த சில தினங்களும் வெயில் அளவு 95 முதல் 100 டிகிரி அளவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்னும் 4 தினங்களுக்கு அதிக வெப்பம் நீடிக்கலாம். அதன்பிறகு சென்னையில் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து