முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் கூட்டு குடிநீர் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 30 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ரூ. 814 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். முதல்வர்  ஜெயலலிதா   தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்டம் -ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1032  ஊரகக் குடியிருப்புகள் மற்றும் வத்திராயிருப்பு, சேத்தூர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி, டபிள்யூ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சி  பகுதிகள் பயன் பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலிக் காட்சி  மூலமாகத் துவக்கி வைத்தார்.

மேலும், 345 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் 104 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின்விசை திட்டம் போன்ற எண்ணற்ற  குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் -  ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1032  ஊரகக் குடியிருப்புகள் மற்றும் வத்திராயிருப்பு, சேத்தூர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி, டபிள்யூ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சி  பகுதிகள் பயனடையும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர்  ஜெயலலிதா  காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.

மேலும், 27 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  திருப்பூர் மாவட்டம் -  ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சார்ந்த 238 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சி ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 16 கோடியே 16 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  திருச்சிராப்பள்ளி மாவட்டம் – கூடப்பள்ளி, முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த 130 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் – ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 12 ஒன்றியங்களைச் சார்ந்த 1345 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் – கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 116 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 14 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் – பெருந்துறை மற்றும் சென்னிமலை ஒன்றியங்களைச் சார்ந்த 130 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; என மொத்தம் 708 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான  கூட்டுக் குடிநீர் திட்டங்களை   முதலமைச்சர்  ஜெயலலிதா   துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் – ஆத்தூர் நகராட்சியில் 7 கோடியே 13 லட்சம் ரூபாய்   மதிப்பீட்டிலும்; மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய நகராட்சிகளில் 30 கோடியே99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் நகராட்சியில் 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் – பெரியநெகமம், சூளீஸ்வரன்பட்டி மற்றும்  கோட்டூர் ஆகிய பேரூராட்சிகளில் 17 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;  தஞ்சாவூர் மாவட்டம் – அய்யம்பேட்டை, திருநாகேஸ்வரம் மற்றும் தாராசுரம் ஆகிய பேரூராட்சிகளில் 29 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஈரோடு மாவட்டம் – அம்மாபேட்டை மற்றும் நம்பியூர் பேரூராட்சிகளில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; தருமபுரி மாவட்டம் – பென்னாகரம் பேரூராட்சி; நாகப்பட்டினம் மாவட்டம் – கீழ்வேளூர் பேரூராட்சி;  திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பொன்னம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, பூவலூர் மற்றும் சிறுகமணி பேரூராட்சிகள்; பெரம்பலூர் மாவட்டம் – அரும்பாவூர் பேரூராட்சி; புதுக்கோட்டை மாவட்டம் – கீரமங்கலம் ஆகிய   பேரூராட்சிகளில்  3 கோடியே 7  லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; என மொத்தம் 104 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டங்களை  முதலமைச்சர்  ஜெயலலிதா  துவக்கி வைத்தார்.

முதல்வர்ஜெயலலிதா  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 813 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர்  கு.ஞானதேசிகன்,  தமிழ்நாடு அரசு ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன்,   (ஓய்வு), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர்  க.பணீந்திர ரெட்டி,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்  சி.விஜயகுமார்,  நகராட்சி நிர்வாக இயக்குநர்   கோ.பிரகாஷ்,   பேரூராட்சிகளின் இயக்குநர்  ராஜேந்திர ரத்னூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து