முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.4 லட்சம் விண்ணப்பங்கள்

சனிக்கிழமை, 30 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.4 லட்சம் விண்ணப்பங்களும் மருத்துவ படிப்புக்கு 31 ஆயிரம் விண்ணப்பங்களும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.  தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துறை என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என மொத்தம் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதேபோல, தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன. 13 சுயநிதி மருத்துவகல்லூரிகள் உள்ளன.

அவற்றில் 8 மருத்துவகல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி உள்ளது. 18 சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்தநிலையில் 2015-2016-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புக்கு கடந்த 6-ந்தேதியும் (புதன்கிழமை), மருத்துவ படிப்புக்கு கடந்த 11-ந்தேதியும் (திங்கட்கிழமை) விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. இதில் என்ஜினீயரிங் படிப்புக்கு தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி கடந்த 6-ந்தேதி தொடங்கி 27-ந்தேதியுடன் முடிந்தது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் நேற்று முன்தினம்  முடிவடைந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 29-ந்தேதி (அதாவது நேற்று முன்தினம் ) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. கடைசி நாளானநேற்று முன்தினம் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 18 நாட்களாக நடந்து வந்த விண்ணப்ப வினியோகம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த வருடம் மட்டும் மருத்துவ படிப்புக்கு 35 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட 31 ஆயிரத்து 332 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மருத்துவ படிப்புக்கும் விண்ணப்பங்கள் பெறும் பணி  முடிவடைந்தது. கடைசி நாளானநேற்று முன்தினம் மட்டும் 7 ஆயிரத்து 217 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து