முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆய்வு

திங்கட்கிழமை, 1 ஜூன் 2015      அரசியல்

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் 27–ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல் – அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் வாக்குசாவடி அமைக்கப்படும் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3–ந் தேதி தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வசதியாக தேர்தல் அதிகாரி அறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியின் மாவட்ட தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள். இந்த தொகுதியில் அமைக்கப்படும்  வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக நேற்று தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் தண்டையார் பேட்டை, கொருக்குப் பேட்டை பகுதிக்கு சென்றார்.

நேதாஜி நகர் அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளியில் 10 வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அவற்றை விக்ரம்கபூர் பார்வையிட்டார். அதன் பிறகு எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள இ.சி.ஐ. மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்படும் 7 வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து