முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் துவங்கியது: ஓ.பன்னீர்செல்வம் ஓட்டு சேகரிப்பு

திங்கட்கிழமை, 1 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, முதல்வர்  ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்  வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.

ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

சென்னையில் காலியாக உள்ள ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்)   சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா   வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா, ஆர்.கே.நகர்  தொகுதியில்  போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும்  ஆர்.கே.நகர்  தொகுதி அ  தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக  வெள்ளத்தில்  திளைத்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  திருவிழா போல கொண்டாடினர். முதல்வர்  ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தொகுதியில் உள்ள  சுவர்களில் விளம்பரம்  செய்து பிரச்சாரத்தை தொடங்கினர்.
இந்த நிலையில் அ தி.மு.க. தேர்தல்  பணிமனை திறப்பு விழா ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் நேற்று முன்தினம்  திறக்கப்பட்டது.

அ  தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். விழாவில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பழனியப்பன், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, வி.செந்தில்பாலாஜி, எஸ்.கோகுல இந்திரா, தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி,  செங்கோட்டையன் எம்.எல்.ஏ.  உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேர்தல் பணிமனை திறக்கப்பட்டதை தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மேற்கொண்டனர்.

சாலையில் சென்ற பேருந்துகளில் இருந்த பயணிகள், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள், கடைகளில் இருந்த வியாபாரிகள் ஆகியோரிடம் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது, ஜெயலலிதா நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கி ‘அம்மா’வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள், என்று கேட்டுக்கொண்டனர். வீதிவீதியாக சென்று பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர்கள் ஈடுபட்டனர்.

ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்து சொல்லி ஓட்டு கேட்டனர். பெரிய அளவில் இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா படத்தை கையில் ஏந்தியபடி ஓட்டு கேட்டு சென்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து