முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் :இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தமது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அத்தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது..

இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல்இன்றுதொடங்குகிறது. 10–ந்தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் ரிப்பன் மாளிகை ஆகிய 2 இடங்களில் அறை தயாராக உள்ளது. வேட்பாளர்கள் எந்த இடத்தில் உள்ள அலுவலகத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம்  நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பெயரை தொகுதியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதும்.இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சி சார்பில் 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு அவர்களும் பணிகளை தொடங்கி விட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி ராகுல்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  இன்று ஆர்.கே.நகர். பகுதியில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் பணியில் நேரடியாக ஈடுபடுவார்.

துணை ராணுவமும் பாதுகாப்புக்கு வர உள்ளது. இந்த தொகுதியில் விதி மீறி வைக்கப்பட்ட 412 போஸ்டர்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. தொகுதியை சுற்றி 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து