Idhayam Matrimony

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 27000 புள்ளிகளாக சரிவு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை, இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்திதுள்ளது. பங்குச் சந்தையில் விற்கும் போக்கு அதிகமாக இருந்ததால் சரிவு தொடர்ந்தது. நேற்று 351 புள்ளிகள் சரிந்து 26837 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்துள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 101 புள்ளிகள் சரிந்து 8135 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் இருக்கும் 30 பங்குகளில் 24 பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சேவை துறையின் செயல்பாடும் குறைந்திருக்கிறது என்று ஹெச்எஸ்பிசி தெரிவித் திருக்கிறது. பருவ மழை குறைவு காரணமாக எப்எம்சிஜி, உரம், இரு சக்கர மற்றும் டிராக்டர் பங்குகள் சரிந்து முடிந்தன. மேலும் பருவமழை காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக் கப்பட்டிருக்கிறது.

அனைத்து குறியீடுகளும் சரிந்து முடிந்தன. குறிப்பாக ரியால்டி துறை குறியீடு 5.54 சத வீதம் அளவுக்கு சரிந்தது. ஜேபி குழும நிறுவனங்கள், சுஸ்லான், யுனிடெக், ஐவிஆர்சிஎல், டிஎல்எப், ஜிடிஎல் ஆகிய பங்கு கள் கடுமையாக சரிந்தன.

இதற்கடுத்து எப்எம்சிஜி குறி யீடு 3.45 சதவீதமும், மின்துறை குறியீடு 2.22 சதவீதமும் சரிந்து முடிந்தன. அதேபோல மிட்கேப் (1.58%) மற்றும் ஸ்மால்கேப் (1.98%) சரிந்து முடிந்தன. சென் செக்ஸ் பங்குகளில் டாடா பவர், ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் கடுமையாக சரிந்தன.

எப்எம்சிஜி துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளில் ஒன்று மாகி. இந்த நூடுல்ஸில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நெஸ்லே இந்தியா பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்து முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து