முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர். தேர்தல்: தே.மு.தி.க. முடிவுக்காக காத்திருக்கும் பா.ஜனதா

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாடு இன்னும் உறுதியாகவில்லை.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிட்டதால் இந்த தேர்தலிலும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது, ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பினால் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தே.மு.தி.க.வும் போட்டியிட சம்மதித்ததாக கூறப்படுகிறது.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்ததால் எதிர்ப்பு ஓட்டுகளை பெற முடியும் என்று நம்பிக்கையில் விஜயகாந்த் போட்டியிடும் முடிவுக்கு வந்திருந்தார்.

ஆனால், திடீரென்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட போவதாக அறித்துள்ளது. எனவே போட்டியிடுவதா? வேண்டாமா? என்ற தயக்கத்தில் தே.மு.தி.க. உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலைப்பாட்டை ஓரிரு நாளில் அறிவிப்போம் என்று தமிழிசை கடந்த சில தினங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார். முக்கிய கூட்டணி கட்சியான தே.மு.தி.க. இன்றும் உறுதியான முடிவை தெரிவிக்காததால் பா.ஜனதாவும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுகின்றன. விஜயகாந்தின் முடிவுக்காக பா.ஜனதா தலைவர்கள் காத்திருக்கிறார்கள்.

பா.ஜனதா பொருத்தவரை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த இடைத்தேர்தலில் மல்லு கட்ட வேண்டாம் என்ற மனநிலையே உள்ளது. தே.மு.தி.க. போட்டியிட்டால் பா.ஜனதா ஆதரிக்கும். இல்லாதபட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தலை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து