முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் டிவி பங்குகள் ‘கிடு கிடு’ சரிவு ரூ.850 கோடி இழப்பு

திங்கட்கிழமை, 8 ஜூன் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில்  சன் டி.வி.யின் பங்குகள் விலை  திடீரென்று நேற்று காலை 28% சரிந்தது. அதனால் ரூ.850 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.  சன் குழுமத்தின் 33 டிவி சேனல்கள் ஒளிபரப்புக்கான லைசென்ஸ் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அதன் பங்குகள் விலையில் இப்போது பலத்த சரிவு கண்டுள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் 33 டிவி சேனல்கள் ஒளிபரப்பு லைசென்ஸை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்காக மத்திய அரசிடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டி.வி. சேனல்கள் ஒளிபரப்புக்கு உள்துறை அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி’ சான்றிதழ் கட்டாயம் தேவை. ஆனால் டி.வி. நிறுவனத்தின் அதிபர்  கலாநிதிமாறன் அவரது சகோதரரான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோருக்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கும், சட்டவிரோத தொலைபேசி இணைப்புக்கான வழக்கு ஆகியவை நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சகம் அந்த ‘‘பாதுகாப்பு அனுமதி’’ சான்றிதழை வழங்கவும் மறுத்துவிட்டது.

ஒளிபரப்பு நிறுத்தப்படும்

இது தொடர்பாக ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு உள்துறை  அமைச்சகம் விளக்க அறிக்கையை அனுப்பியுள்ளது. இதனால் சன் டி.வி. குழுமத்தின் 33 டி.வி. சேனல்களின் லைசென்ஸ் ரத்தாகி ஒளிபரப்பு நிறுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது.

இது இன்றைய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் சன் டி.வி.யின் பங்குகள் சுமார் 28% வரை சரிவை சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 26% சரிவை சந்தித்தது. முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையில் சன் டி.வி. பங்கு விலை மதிப்பானது ரூ.320–லிருந்து ரூ.258 ஆக சரிந்திருந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தையானது நிஃப்டியில் சன் டி.வி. பங்கு விலை மதிப்பானது ரூ.356–லிருந்து காலையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.320 ஆகவும் பின்னர் ரூ.265 ஆகவும் சரிவை சந்தித்தது.

ராஜ்நாத் சிங் பிடிவாதம்

முன்னதாக சன் குரூப்பின் 40 பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை   அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு   கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ராஜ்நாத் சிங் தன்னுடைய எண்ணத்தை  மாற்றிக்  கொள்ளவில்லை. பிடிவாதமாக இருந்துவிட்டார். இதுகுறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி ஒருவர்  கூறும்போது, உள்துறை அமைச்சகம் இந்த சேனல்களின் உரிமத்தை ரத்து செய்யவும்   ஒளிபரப்பை  நிறுத்தவும் அருண் ஜேட்லிக்கு (தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை  அமைச்சர்)  பரிந்துரை கடிதம் அனுப்ப திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து