முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன்: வாவ்ரிங்கா சாம்பியன்

திங்கட்கிழமை, 8 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

பாரிஸ் -  பிரெஞ்ச் ஒபன் பட்டம் வென்று 4 கிராண்ட் ஸ்லாம்களையும் வென்ற 8-வது வீரராகும் சாதனைக் கனவுடன் களமிறங்கிய செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவிடம் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவ, வாவ்ரிங்கா முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்றார். ஜோகோவிச் 4 ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் இறுதியில் 3-வது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.

முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஜோகோவிச், வாவ்ரிங்கா இரண்டு பிரேக் பாயிண்ட்களைக் காப்பற்றிக்கொள்ள கடைசியாக வாவ்ரிங்காவின் சர்வ் ஒன்றை முறியடித்து 4-3 என்று முன்னிலை பெற்றார் ஜோகோவிச். தவறு வாவ்ரிங்காவினுடையது, ஏனெனில் தன் சர்வில் 2 டபுள் ஃபால்ட்களை செய்ய ஜோகோவிச் அந்த சர்வை முறியடித்தார்.  இரண்டாவது செட்டில் வாவ்ரிங்காவின் ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் நன்றாக அமைந்தன, இருந்த போதிலும் 4வது கேமில் ஜோகோவிச் சர்வை முறியடிக்க கிடத்த வாய்ப்பை வாவ்ரிங்கா கோட்டை விட்டார். பிறகு 6-வது கேமிலும் ஒரு பிரேக் வாய்ப்பு கிடைத்தது,

ஆனால் வாவ்ரிங்கா அதனையும் நழுவ விட்டார். 8-வது கேமில் மீண்டும் ஒரு பிரேக் வாய்ப்ப்பு பறிபோக கோபமடைந்த வாவ்ரிங்கா தனது ராக்கெட்டை தரையில் ஓங்கி அடித்து வெறுப்பை காண்பித்தார். ஆனாலும் ஜோகோவிச்சின் பேக்ஹேண்ட் ஷாட் ஒன்று சரியாக அமையாமல் 2-வது செட்டைக் கைப்பற்றினார் வாவ்ரிங்கா. 3-வது செட்டில் தனது சர்வை இழந்த ஜோகோவிச் 2-4 என்று பின்தங்கினார். அதன் பிறகு ஜோகோவிச், வாவ்ரிங்கா சர்வை பிரேக் செய்தார், அதாவது முதல் செட்டின் 7-வது கேமுக்குப் பிறகு 3-வது செட்டில் பிரேக் செய்தார். ஆனால் அதன் பிறகு வாவ்ரிங்கா ஆடிய ஆக்ரோஷமான பேக் ஹேண்ட் ஷாட்கள், துல்லியமான ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் ஆகியவை முன்னால் ஜோகோவிச் சரணடைந்தார்.

4-வது செட்டில் ஜோகோவிச் 3-0 என்று முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் விட்டுக் கொடுக்காத வாவ்ரிங்கா 30 ஸ்ட்ரோக் ராலியில் பிரேக்கிலிருந்து தனது சர்வை மீட்டார், பிறகு ஜோகோவிச் 2 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை காப்பாற்றிக் கொண்டார். இதனால் 4-3 என்று தொடர் முன்னிலை வகித்தார்.  8-வது கேமில் வாவ்ரிங்கா அளித்த 3 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை ஜோகோவிச் வின்னராக மாற்ற முடியவில்லை. மாறாக அபாரமான பேக்ஹேண்ட் ஷாட்களில் வாவ்ரிங்கா 5-4 என்று முன்னிலை பெற்றார். பிறகு மீண்டும் அதே பேக்ஹேண்ட் அபார ஷாட் ஒன்றுதான் பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து