முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த ராகுலுடன் நிதீஷ் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      அரசியல்
Image Unavailable

டெல்லி -  பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தாம் சந்தித்ததாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த மெகா கூட்டணிக்காக நிதிஷ், லாலு ஆகியோர் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர். இதில் நிதிஷ்- லாலு கட்சிகளிடையே இணக்கம் ஏற்பட்டு நிதிஷ்குமாரையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டனர். முன்னதாக ராகுல்காந்தியையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினேன்.

பீகார் சட்டசபை தேர்தலுக்காக ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக சந்தித்தேன். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, மதச்சார்பற்ற அத்தனை கட்சிகளும் இந்த மெகா கூட்டணியில் இணைந்து வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கவும் இல்லை. இதற்கு முன்னரும் நான் ராகுலை சந்தித்து பேசியும் இருக்கிறேன்.இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து