முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராவிட்டுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: ரஹானே

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி -  என்னதான் ராகுல் டிராவிட்டை போன்ற நுணுக்கத்துடன் ஆடினாலும், தன்னை, அடுத்த ராகுல் டிராவிட் என்று அழைக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய இளம் பேட்ஸ்மேன் ரஹானேவின் பேட்டிங் ஸ்டைல், இந்தியாவின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டை போன்று உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜாம்பவானான ராகுல் டிராவிட் போன்ற வீரருடன் தன்னை ஒப்பிடுவது வேண்டாம் என்று ரஹானே கேட்டுக் கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் மூலம் காலடி எடுத்து வைத்த ரஹானே, தற்போது, டி20 வகை போட்டிகளிலும் கலக்கலாக ஆடி வருகிறார். அதேநேரம், தனக்கு டெஸ்ட் போட்டிகள்தான் முதல் முன்னுரிமை என்கிறார் ரஹானே. உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானேவுக்கு, வங்கதேச சுற்றுப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து