முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி வங்க தேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3ஒரு நாள் போட்டிகளில் ஆட அந்த நாட்டிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த அணிகள் ஆடும் டெஸ்ட் போட்டி பதுல்லாவில் இன்று துவங்குகிறது. இந்திய டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணிக்கு விராத் கோலி காப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி டெஸ்ட்டில் அவரது தலைமையிலான இந்திய அணி டிரா செய்தது. கோலிதலைமையில் இந்தியா ஆடும் 3வது டெஸ்ட்டாக வங்க தேச டெஸ்ட் போட்டி உள்ளது. அவரதுதலைமையில் முதல் வெற்றியை பெற வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

ஐபிஎல்கிரிக் கெட் சமீபத்தில் முடிந்தது.அந்த போட்டியில் ஆடிய அனுபவத்துடன் இந்திய வீரர்கள் வங்க தேச அணியை எதிர் கொள்கிறார்கள். ரோகித் சர்மா, ரகானே, முரளி விஜய் தவான், புஜாரா போன்ற சிறந்த பேட்ஸ்மென்களும் உமேஷ் யாதாவ் புவனேஷ்குமார் இஷாந்த் சர்மா அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது இந்திய அணியில் ஆடஇடம் கிடைத்துள்ளது.2ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தேசிய அணியில் ஆடுகிறார். அவர் இறுதியாக கடந்த 2013ம்ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதரபாத்தில் நடந்த டெஸ்ட்டில் ஆடினார்.34வயதான ஹர்பஜன் சிங்413விகெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

வங்க தேச அணி சமீபத்தில் உலககோப்பை மற்றும் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடியது. இதனால் சொந்த மண்ணில் அந்த அணி இந்தியாவுக்கு பெரும் சவாலை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்க தேச அணி முஸ்பிகுர் ரகீம் தலைமையில் ஆடுகிறது. அந்த அணியில் ஆல் ரவுண்டர்சப்-அல்-ஹசன் உள்ளார். அவர் வங்கதேச அணியின் நம்பிக் கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

வங்க தேசத்திற்கு எதிராக இந்திய அணி இதுவரை தோற்றது இல்லை. இதனால் இந்திய அணி நம்பிக் கையுடன் வங்க தேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இறுதியாக2010ம்ஆண்டு ஜனவரி மாதம் டாக்காவில் மோதின. அந்த டெஸ்ட்டில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தியது.

இந்தியா அணி இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஆடிய டெஸ்ட்டை டிரா செய்தது.வங்க தேச அணி கடைசியாக பாகிஸ்தானுடன் மோதியது. அதில் வங்க தேச அணி தோற்றது. இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் கிரிக் கெட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து