முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து கால்பந்து கலவர குற்றவாளிகள் 11 பேருக்கு மரணத்தண்டனை

செவ்வாய்க்கிழமை, 9 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

கெய்ரோ: எகிப்தில் கடந்த 2012ம்ஆண்டில் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்டகலவரத்தின் போது 70பேர் கொல்லப்பட்டார் கள் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 11பேருக்கு மரணதண்டனையும் 40பேருக்கு 15ஆண்டுகள் தண்டனையையும் அந்த நாட்டில் உள்ள போர்ட் செட் நகரில் உள்ள கிரிமினல் நீதிமன்றம் விதித்தது.

கடந்த 2012ம்ஆண்டுபிப்ரவரி மாதம் போர்ட் செட் நகரில் ஒரு லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் எகிப்து தலைநகர் கெய்ரோ அல் அகிலி அணியும் உள்ளூர் அணியான எல் -மர்சியும் மோதின .இந்த ஆட்டத்தின் முடிவில் பயங்கர கலவரம்  ஏற்பட்டது. இந்த கலவரத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டதால்  70பேர் கொல்லப்பட்டனர்.பல நு◌ாறு பேர் காயம் அடைந்தார்கள். இந்த வன்முறை வழக்கு தொடர்பாக கடந்த 2013ம்ஆண்டில் போர்ட் செட் நகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதனால் அந்த நகரில் அவசர நிலையை எகிப்து ஜனாதிபதி முகமது மோர்சி கொண்டு வந்தார். இந்த வழக்கில் 73பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மறு விசாரணை நடந்தது. இந்த விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட11பேருக்கு மரணத்தண்டனை அறிவிக்கப்பட்டது. 40குற்றவாளிகளுக்கு 15ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட இதர22 நபர்கள் மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கிரிமினல் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளிகள் முறையீடு செய்யும் நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து