முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச டெஸ்ட்: ஷிகர் தவான் 150: இந்தியா வலுவான துவக்கம்

புதன்கிழமை, 10 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

பதுல்லா,ஜூன்-11 வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் இருவரின் சிறப்பான ஆட்டத்தால், நல்ல தொடக்கம் கண்டுள்ளது.வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று தொடங்கியது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர்.  குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.22.2 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் 23.3 ஓவர்களின்போது, இந்தியா விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது.

உடனே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விஜய் 70 பந்துகளில் 33 ரன்களுடனும், தவான் 71 பந்துகளில், 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதையடுத்து சுமார் 4 மணி நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழை எந்த விதத்திலும், இந்திய வீரர்கள் ஆட்டத்தை பாதிக்கவில்லை. அவர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 31.3 ஓவர்களில் இந்தியா, விக்கெட் இழப்பின்றி 150 ரன்னை தொட்டது.36 ஓவர்கள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 167 ரன்களுடன் ஆடி வந்தது. தவான் 102 பந்துகளில் 103 ரன்களுடனும், விஜய் 114 பந்துகளில் 64 ரன்களுடனும் களத்தில் நங்கூரமிட்டு ஆடி வந்தனர். முதல் நாள் ஆட்டத்தில்  முடிவில் தவான் 150 ரன்களுடனும், முரளி 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. ஏனெனில், ஆட்டத்தின் கடைசி இரு நாட்களும், பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்கின்றனர் பிட்ச் வல்லுநர்கள். இப்போட்டியில், இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் 2 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் வந்துள்ளார். அஸ்வினும் 11 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து