முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜிம்பாவேவுக்கு சுற்று பயணம்

புதன்கிழமை, 10 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது.இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது.

இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்குநருமான காம்பெல் தமது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இந்திய அணி ஜிம்பாப்வேயில் விளையாடுகிறது.

3 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.இப்போட்டிகளுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு கோஹ்லி தலைமையில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து