முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச டெஸ்ட்: 3ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு: முரளி விஜய் சதம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

பதுல்லா -  வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்துவரும் இந்தியா, 3ம் நாளான நேற்று  6 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

மழை காரணமாக 4 மணி நேரங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் மொத்தம் 56 ஓவர்கள்தான் வீசப்பட்டன. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 239 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷிகர் தவான் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் தடைபட்டது.  மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை விடாமல் பெய்ததால், 2வது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாக, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் அம்பயர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, 3வது நாள் ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நேற்று தொடங்கியது. இந்திய தொடக்க வீரர்கள் இருவருமே தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். முதல் நாள் ஆட்டத்தில் 89 ரன்களுடன் களத்தில் நின்ற விஜய், இன்று சதம் கடந்தார். அதேநேரம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்த தவான், மேற்கொண்டு 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 173 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய இரட்டை சத நாயகன், ரோகித் ஷர்மாவோ, 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார்.

இதைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லியும், ஜூபைர் ஹொசைன் பந்தில் பௌல்ட் ஆகி வெளியேற இந்தியா 310 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.  முதல் நாளில் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3வது நாளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பனும் விஜயுடன், அஜிங்ய ரஹானே ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.விஜய் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி 150 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஷகிப் அல் ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதிரடியாக ஆடிய ரஹானே 103 பந்துகளில் 98 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசன் பந்தில் பௌல்ட் ஆகி, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.இதன்பிறகு களமிறங்கிய விருத்திமான் சாகா 6 ரன்களில் ஹொசைன் பந்தில் பௌல்ட் ஆனார்.

இந்நிலையில், 462 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது. அஸ்வின் 2 ரன்கள், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்திலுள்ளனர்.  முன்னதாக, உணவு இடைவேளையின்போது மழை பெய்ததால் சற்று தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முரளி விஜய் சதம் துவக்க வீரர் தவனை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய்யும் சதமடித்தார். முரளி விஜய் 201 பந்துகளில் சதம் கடந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து