முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: லியாண்டர் பயஸ் விலகல்

சனிக்கிழமை, 13 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

டெல்லி - டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா-ஓசியானியா குரூப்-1 போட்டியில்  இந்திய அணியில் இருந்து மூத்த வீரரான லியாண்டர் பயஸ் விலகியுள்ளார்.  ஜூலை 17 முதல் 19 வரை நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியிலிருந்து பயஸ் விலகியிருப்பதால் ரோஹன் போபண்ணா-சாகேத் மைனேனி ஜோடி இரட்டையர் பிரிவு போட்டியில் விளையாடவுள்ளது. ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், யூகி பாம்ப்ரி ஆகியோர் களமிறங்கு கின்றனர். தமிழக வீரரான ராம்குமார் ராமநாதன் மாற்று ஆட்டக்காரராக அணியில் இடம்பெற்றுள்ளார்.  இது தொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எஸ்.பி.மிஸ்ரா கூறுகையில், “பயஸுக்கு வேறு பணிகள் இருப்பதால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாகக் கூறிவிட்டார்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து